• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரலாற்று வெற்றி - மிலானி தியாகராஜா மொன்றியலில் நகராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு

கனடா

மொன்ட்ரியால்: கியூபெக் மாகாணத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு பொன்பதிக்கப்பட்ட திருப்புமுனையாக, மிலானி தியாகராஜா டார்லிங்டன் பகுதியில் இருந்து கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வெற்றியுடன், கியூபெக்கில் தேர்வு பெற்ற முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார்.

கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, 'என்செம்பில் மொன்ட்ரியால்' (Ensemble Montréal) கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்து, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு டார்லிங்டனைக் கட்டியெழுப்பும் வாக்குறுதியுடன் பிரச்சாரத்தில் இறங்கினார்.

கனடா சேவை மையத்தில் (Service Canada) பல ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர், குடிமக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

தனது வெற்றிக் கூட்டத்தில் உரையாற்றிய மிலானி தியாகராஜா, "இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம். டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதி செய்வேன். நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன்" என்று கூறினார்.

கியூபெக் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியின் இந்த வரலாற்று வெற்றி, மொன்ட்ரியால் மற்றும் கியூபெக்கின் பல்பண்பாட்டு ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது.
 

Leave a Reply