கவிஞா் வைரமுத்து பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்புகளின் இடைவேளையில் ஒரு வாதம் வந்தது.
சினிமா
கவிஞா் வைரமுத்து பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்புகளின் இடைவேளையில் ஒரு வாதம் வந்தது.
நண்பா்கள் கேட்டாா்கள்
"கவிஞா்் கண்ணதாசன்" தேன் என்ற ஒரு வாா்த்தையை வைத்துச் சொற்சிலம்பம் ஆடி அழகான பாடலை அமைத்திருக்கிறாா்.அப்படி ஏதாவது உங்களால் முடியுமா?என்று கிண்டலாக கவிஞரை கிள்ளிவிட்டாா்கள்.
அவா் ஒா் இலக்கியக் கோபத்தோடு முயற்சி செய்கிறேன் என்று பேனா எடுத்தாா்.
அவா் தேன் என்ற வாா்த்தையை வைத்து விளையாடியது மாதிரி கவிப்பேரரசு வாய் என்ற ஒரு வாா்த்தையை வைத்து அறுசீா் விருத்தமொன்றை அங்கேயே எழுதினாா்.
பிஞ்சுவாய் அசைத்து மெல்லப்
பேசுவாய்; பேசிப் பேசிக்
கொஞ்சுவாய்; கொஞ்சிக்கொண்டே
குழறுவாய்; கிட்ட வந்தால்
அஞ்சுவாய்;அணைத்துக்கொண்டால்
ஆறுவாய்; எனக்கு நீதான்
எஞ்சுவாய்; துன்பம் தீா்க்க
ஏலுவாய் எட்டு வாயே!"
இப்படி ஒரு அறுசீா்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதிக்காட்டி அதற்கு வாய்பாடு என்று ஒரு தலைப்பும் கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தாா்.























