• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் திருநெல்வேலி சந்தை போதை ஆசாமியால் அல்லோலகல்லோலம் - ஆடைகளை களைந்து அநாகரிகம்

இலங்கை

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் நேற்றைய தினம் (2) , சந்தைக்குள் சனநெருக்கடி மிகுந்த நேரம் இளைஞன் ஒருவர் கடும் போதையில் தனது ஆடைகளை களைந்து மக்களுக்கு இடையூறு விளைவித்ததக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த போதை ஆசாமி தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும், சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என கூறப்படுகின்றது.

இளைஞனின் பாட்டி முறையான வயோதிப பெண்ணொருவர் இளைஞனை அவ்விடத்தில் இருந்து அழைத்து செல்ல முற்பட்ட வேளை , இளைஞன் அவரையும் தாக்க முற்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்து இளைஞனின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சந்தைக்கு விரைந்து வந்து இளைஞனை அங்கிருந்து அழைத்து சென்றிருந்தனர்.

அதேவேளை திருநெல்வேலி சந்தை பகுதியில் போதை வியாபரிகள் மற்றும் , போதை பாவனையாளர்கள் அதிகரித்து காணப்படுகிறதாக கூறப்படுகின்றது. போதை ஆசாமிகளால் சந்தை வியாபாரிகள் , சந்தைக்கு வருவோர் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அவர்கள் தொடர்பில் வியாபர இடங்ககளில் பொருத்தப்பட்டுள்ள மற்றும் பிரதேச சபையினால் , சந்தைக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும், போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை சந்தையில் இருந்து வெளியேற்ற நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனர். 
 

Leave a Reply