• Welcome to TamilsGuide
செய்திகள் 1

14-ந்தேதி முதல் மீண்டும் திரையரங்குகளில்...ஆட்டோகிராப்

சினிமா

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் கதாநாயகன் சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் இன்றளவும் ரசிர்களால் ரசிக்கப்படுவதும், பலரும் மோடிவேசன் பாடலாக இருப்பதும் குறிப்பிடத்ததும். மேலும் இப்பாடலை பாடிய சித்ரா, பாடலை எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.

Leave a Reply