ஷாருக் கான் நடிக்கும் கிங் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசர்
சினிமா
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கிங் படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட கடைசியான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
அவர் நடித்து வரும் கிங் படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இதற்கிடையே ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.
ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் இதனால் உங்களை மிஸ் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் ஷாருக் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
























