• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருத்துவ உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கனடிய பெண்

கனடா

கனடாவில் யுவதியொருவர் உடல் செயலிழந்திருந்த நிலையிலிருந்து மீண்டு மரத்தான் போட்டிகளில் கலக்கி வருகின்றார்.

கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 20 வயதான அனிக் நடோ பிரேசெட் என்ற இந்த யுவதி இந்த ஆண்டில் ஐந்து மரத்தான் ஓட்டப் போட்டிகளிலும் இரண்டு அல்ட்ரா மரத்தன் ஓட்டப் போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார்.

60 கிலோ மீட்டர் மலைப்பாதை ஓட்ட போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

குயிலென் சின்ட்றோம் நோய் 

இந்தப் பெண் சுமார் ஆயிரத்து இருநூறு கிலோ மீட்டர் ஓட்டமாகவும் 3400 கிலோமீட்டர் சைக்கிளிலும் கடந்துள்ளார்.

மெக்சிகோவில் நடைபெற உள்ள அயன் மேன் போட்டிகளில் இவர் பங்கேற்று உள்ளார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த யுவதியின் தலை முதல் பாதம் வரையில் செயலிழந்து இருந்தது.

குயிலென் சின்ட்றோம் எனப்படும் மிகவும் அரிதான ஒரு நோயினால் இந்த பெண் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த யுவதி, உடலின் நரம்புகள் பாதிக்கப்பட்டு திடீர் தளர்ச்சி உணர்விழப்பு மற்றும் முழு ஊனமுற்ற நிலையில் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நோய் பலருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என்ற போதிலும் குறித்த யுவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

இந்த நோயிலிருந்து மீள்வதற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என மருத்துவர்கள் எதிர்வுகூறிய போதிலும் இந்த யுவதி சுமார் ஒரே மாதத்தில் எழுந்து நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குருதியின் பிளாஸ்மா என்ற பொருளைப் பயன்படுத்தி அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் மூலம் குறித்த யுவதி பூரண குணமடைந்துள்ளார். 

இரத்த தானம் காரணமாக இவரது உயிர் காக்கப்பட்டுள்ளது என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply