யாழ் சாவகச்சேரி பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
இலங்கை
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவற்குழி பகுதியில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின்போது, உடமையில் 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி கோணேஸ்வரன் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய என தெரிவித்த பொலிசார் சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக பல பகுதிகளில் போதை பொருள் பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
























