• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வால் நட்சத்திரங்கள் தான் கீழே விழும்!

சினிமா

நாம் தற்போது இருக்கும் சமூகத்தில் ஒருவன் கூலியாகவோ, கார்பெண்டராகவோ, கண்டக்டராகவோ இருந்தால், அப்படியே இருந்து விட வேண்டும். அவரே உழைத்து, ஜெயித்து முன்னேறிவிட்டால் , அல்லது பெரிய சக்தியான நிலைக்கு வந்தால் அவரை இந்த சமூகம் முடிந்தவரை கீழ இழுக்க பார்க்கும்!
இது ரஜினிக்கு மட்டும் அல்ல,
கீழ் மட்டத்தில் இருந்து முன்னேறி பெரிய ஆளாக இருக்கும் அனைவருக்குமே இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன. விமர்சனங்கள் ஆரோக்கியமானவை, தாக்குதல்கள் ஆபத்தானவை.
தலைவர் ரஜினியை பற்றி பதிவுகள் போட்டால் எங்கிருந்து தான் இந்த திடீர் போராளிகள்,
விமர்சகர்கள் வருகிறார்கள் என்று தெரியவில்லை எது செய்தாலும் குற்றம் என்று
குறை கண்டுபிடிக்கிறார்கள் ,
கமெண்ட் பாக்ஸில் கதறுகிறார்கள் 😂

இப்போது அவர் கோடி கோடியா பணம் வச்சிருக்காரு பணத்தை மக்களுக்கு கொடுத்தா என்ன என்கிறார்கள்.
சாப்பாடு இல்லாமல் வேலை இல்லாமல் தெருக் கோடியிலும் , பஸ்ட்டாண்டிலும் ,ரெயில்வே ஸ்டேஷன்களிலும் படுத்து கிடக்கும் போது சாப்பாடு கொடுத்து வேலை வாங்கி கொடுத்து உதவியது போல் 🤷🏻‍♀️ வெக்கமே இல்லாமல்
மக்கள் மனதை மழுங்கடிக்கும் சில மீடியாக்களும், தெளிவில்லாத ஆர்வக்கோளாறுகளும் திருத்தப்படவில்லையென்றால் எதிர்காலத்தில் அன்பு என்பதே குறைந்து, ஒருவருக்கு ஒருவர் வெறுப்புணர்ச்சி மட்டுமே இருக்கும்.
வால் நட்சத்திரங்கள் தான் கீழே விழும்!

 

#சூப்பர்_ஸ்டார்_ரஜினிகாந்த் என்ற இந்த நட்சத்திரம் என்றும் மேலே தான் எழும்! 🤘
TS-Thalaivarin Sonthangal
 

Leave a Reply