NDTV உலக உச்சி மாநாடு - பிரதமர் மோடி, ஹரிணி உள்ளிட்டோர் பங்கேற்பு
இலங்கை
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருடன் 2025 NDTV உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.
2025 NDTV உலக உச்சி மாநாடானது உலகளாவிய உரையாடலில் ஒரு அசாதாரண தருணத்தைக் குறிக்கும்.
இது நமது காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க சில நபர்களின் குரல்களை ஒன்றிணைக்கிறது.
அவர்களில் இரண்டு பதவியல் உள்ள பிரதர்கள் உள்ளனர்.
இந்தியாவின் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஹரிணி அமரசூரியா.
மேலும், இரண்டு முன்னாள் பிரதமர்களும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தின் ரிஷி சுனக் மற்றும் அவுஸ்திரேலியாவின் டோனி அபோட்.
இரண்டு பதவியில் இருக்கும் பிரதமர்களும் இரண்டு முன்னாள் பிரதமர்களும் மேடையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு அரிய சந்தர்ப்பமாக இந்த மாநாடு அமையவுள்ளது.
2025 ஒக்டோபர் 17, 18 ஆகிய திகதிகளில் புது டெல்லியில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, மகத்தான விளைவுகளைக் கொண்ட உலகளாவிய உரையாடலாகும்.
உலகத்தின் நிலையற்ற, நிச்சயமற்ற தன்மை மற்றும் ஆழமான மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நேரத்தில், நமது சகாப்தத்தை வரையறுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க தலைவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இந்த மாநாட்டில் பங்கெடுப்பார்கள்.
புவிசார் அரசியலிலிருந்து தொழில்நுட்பம் வரை, சூழலியலில் இருந்து கலாச்சாரம் வரை, பொருளாதாரங்களின் கட்டமைப்பிலிருந்து சமூகங்களின் கற்பனை வரை, NDTV உலக உச்சி மாநாடு பகுப்பாய்விற்கு அப்பால் – மறுகற்பனை, மறு கண்டுபிடிப்பு மற்றும் புதுப்பித்தல் வரை செல்ல முயல்கிறது.
இந்த உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை, உலகத் தலைவர்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், ஒரே குடையின் கீழ் ஒன்றுகூடும் பரந்த குரல்களும் காட்டுகின்றன.
இரண்டு முன்னாள் பிரதமர்கள் மற்றும் இரண்டு பிரதமர்களுடன், தலைவர்கள், வணிகக் கட்டமைப்பாளர்கள், புதுமையாளர்கள் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்கள் ஆகியோரும் இந்த உரையாடலில் இணைவார்கள்.























