கனடாவில் இரண்டு முதியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை
கனடா
கனடாவின் ஹாலிபர்டன் கவுண்டியில் இடம்பெற்ற சாலை விபத்தில் இரண்டு முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆல்கோன்க்வின் ஹைலாண்ட்ஸ் பகுதியில் பீச் ஏரி தெற்கே உள்ள விஸ்கி ஜாக் லேன் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிராக்டர் டிரெய்லர் லாரி மோதியதாக கூறப்பட்டுள்ளது. மோதலுக்குப் பிறகு லாரி தீப்பற்றி எரிந்தது, பின்னர் தீயணைப்பு வீரர்கள் அதை அணைத்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 79 வயது ஆண் மற்றும் 64 வயது பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து விசாரணை நடைபெற்று வருவதால், ஹைவே 118 சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு (25th Line முதல் Tulip Road வரை) பல மணி நேரங்கள் மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சாட்சிகளும், சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் அல்லது தகவல்கள் உள்ளவர்களும் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






















