தீபாவளிக்கு இல்லன்னா டிசம்பர் 18-க்கு வருவோம் - Lik படத்தின் ரிலீஸ் அப்டேட்
சினிமா
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Lik) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்ட்டது.
விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 'டூட்' படம் அதே நாளில் வெளியாவதால் Lik படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து, Lik படம் டிசம்பர் மாதம் 18-ந்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
எங்கள் டீசருக்கு கொடுத்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதே ஆர்வத்துடன் படம் வெளியாகும் வரை காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். வரும் வாரங்களில் படம் குறித்த பல புதிய அப்டேட்கள், பாடல்கள் உங்களை தேடி வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.























