ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் கிழக்கு கடற்கரையோரம் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.





















