• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் மருதங்கேணி பகுதியில் தனியார் காணியில் இருந்து வெடிகுண்டுகள் மீட்பு

இலங்கை

யாழ்ப்பாணம் மருதங்கேணி மண்டலாய் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டலாய் பகுதியில் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

குறித்த காணியினை, காணி உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை காணியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் வெடிகுண்டுகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply