திடீரென கடைக்குள் நுழைந்த கரடி- அழையா விருந்தாளியால் வாடிக்கையளர்கள் திகைப்பு
சினிமா
அமெரிக்காவின் அரிசோனாவில் மளிகைக் கடைக்குள் நுழைந்த கரடி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடைக்குள் நுழைவதற்கு முன்னதாகக் கரடி தானியங்கிக் கதவுகளில் மோதி உள்ளே சென்றதும் அது கடையைச் சுற்றி ஓடியது. கரடி சேதம் ஏற்படுதவில்லை என்றும் உணவை எடுத்துச் செல்லவில்லை என்றும் நம்பப்படுகிறது.
அங்கிருந்த அதிகாரி ஒருவர் கடையிலிருந்த மக்களை வெளியேற்ற உதவினார். கரடி கடையை விட்டு வெளியேறிய பிறகு எங்கு சென்றது என்று தெரியவில்லை.
ஒரோ பள்ளத்தாக்கில் (Oro Valley) கரடிகளைக் காண்பது வழக்கமான ஒன்று. எனினும் இந்தச் சம்பவமே வேடிக்கையானது என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.























