தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது
இலங்கை
கடந்த ஜூலை 18 ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மேற்காள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேருந்து நிலையம் ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் நேற்று மாலை (03) கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிளை அவர் செலுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 50 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 05 வாள்கள் என்பன குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
34 வயதுடைய சந்தேக நபர், கல்கிஸை ஸ்டோன், சீவாலி வீதிப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















