மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களை கடத்திய நால்வர் கைது
இலங்கை
சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மொபைல் போன்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஆபரணங்களுடன் தொடர்புடைய நான்கு நபர்களை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 26 ஸ்மார்ட்போன்கள், 10 ஐபேட்கள், 10 டேப்லெட் கணினிகள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் என்பனவும் அடங்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகாவத்தை ரம்யா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டன.
சந்தேக நபர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி துபாய்க்குச் சென்று நேற்று (02) நேற்று நாடு திரும்பியதும் இவற்றை சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக கூறுப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மாளிகாவத்தை, கொச்சிக்கடை பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






















