பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
இலங்கை
இனஅழிப்பு, வலிந்து காணமால் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 25ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளது. இன்றைய போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர்அதிகளவில் கலந்து கொண்டிருந்ததுடன் விசாரணையை வலியுறுத்தியிருந்தனர்.
அந்தவகையில் இப் போராட்டத்தின் இறுதி நாளான நாளைய தினம், மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் அனைவரையும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.






















