• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 இலங்கையர்கள் பெங்களூருவில் கைது

இலங்கை

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் பெங்களூரின் தேவனஹள்ளி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பல மாதங்களாக நகரத்தில் தலைமறைவாக இருந்ததாகவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Times of India செய்திச் சேவையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இரத்மலானையைச் சேர்ந்த வித்யானகமகே இரேஷ் ஹன்ஷக ஜயரத்ன (வயது 31),  கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஜெயசிங்கிள் பத்திரன்னகே சுகத் சமீந்து (வயது 46) மற்றும் தேவேந்திரமுனையை (Dondra) சேர்ந்த ஜெயசரிய முதலிகே திலீப் ஹரிஷன் (வயது 29) என்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தேவனஹள்ளி அருகே  ஓசோன் அர்பானா அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், மூவரும் 2024 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் (தமிழ்நாடு) வரை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்தது.

அதன் பிறகு அவர்கள் பெங்களூருவுக்குச் செல்வதற்கு முன்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சிறிது காலம் தங்கினர்.

அவர்கள் எட்டு மாதங்களாக ஓசோன் அர்பானாவில் வசித்து வருகின்றனர்.

அவர்களில் எவருக்கும் கடவுச்சீட்டு உட்பட செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி, உதவி பொலிஸ் ஆய்வாளர் (போதைப்பொருள் தடுப்புப் பிரிவு) எச்.கே.மஹானந்தா தலைமையிலான சிறப்புக் குழு, அவர்களது குடியிருப்பில் சோதனை நடத்தியது.

வித்யானகமகே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், ஜெயசிங்கிள் மீது இலங்கையில் கொலை மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் பொலிஸார் விசாரணைகளில் தெரிவித்தனர்.

ஹரிஷன் பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் மூவரும் தங்கள் சொந்த நாட்டில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்தியாவுக்கு வந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

மத்திய குற்றப்பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் காவலில் எடுத்துள்ளது.

பெங்களூருவில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய நபரை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

மேலும் தகவலுக்கு இலங்கை தூதரகத்தைத் தொடர்பு கொண்டுள்ளதாக பெங்களூருவின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
 

Leave a Reply