• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம்

இலங்கை

தற்போது இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, இந்தியாவின் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் ஜோஷியை சந்தித்து கலந்துரையாடினார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நடந்து வரும் கூட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல் மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தின.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்வதற்கான போட்டி கொள்முதல் வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல், இந்திய உதவியுடன் இலங்கையில் சூரிய சக்தி பேனல் உற்பத்தி வசதியை நிறுவுதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இலங்கையர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த விவாதங்களில் இடம்பெற்றன.

இந்த கலந்துரையாடல்களின் போது பல முதற்கட்ட ஒப்பந்தங்கள் எட்டப்பட்டதாக எரிசக்தி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எரிசக்தி நிறுவனங்களின் கட்டமைப்பு மாதிரிகள் மற்றும் இலங்கையில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் எரிசக்தித் துறை இலக்குகளை அடையவும் இந்த மாதிரிகளை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது குறித்தும் அமைச்சர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
 

Leave a Reply