• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு

இலங்கை

குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) உயிரிழந்தார்.

இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர்.

ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் அவர்களில் அடங்குகின்றனர்.

மேலும், சில பிக்குகள் காயங்களுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சைபெற்றுவந்த பிக்குகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த உள்நாட்டு பிக்குகளின் இறுதி கிரியையகள் நேற்று இடம்பெற்றதுடன் உயிரிழந்த வெளிநாட்டு பிக்குகளின் உடலங்கள் அவர்களது நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply