சம்மாந்துறையின் விசேட சோதனை – 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இலங்கை
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமை , சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், 20 மோட்டார் சைக்கிள்களையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (26) நடைபெற்றுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதியில் மேற்கொண்ட சோதனையின்போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























