ஹட்டன் குடகம பகுதியில் மண்சரிவு அபாயம்
இலங்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் குடகம பகுதியில் உள்ள பல வீடுகள் மண்சரிவு அபாயத்தில் காணப்படுகின்றன.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஒரு பகுதிக்கு மட்டுமே பாதுகாப்பு பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டபோது, வீடுகளின் குடியிருப்பாளர்கள் கூட்டாக பிரதான சாலையிலிருந்து வீடுகளுக்குச் செல்லும் படிக்கட்டின் மீதமுள்ள பகுதிக்கு ஒரு பாதுகாப்பு பக்கவாட்டு சுவரைக் கட்டியுள்ளனர்.
ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதுகாப்பு பக்கவாட்டு சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. புதிய பாதுகாப்பு பக்கவாட்டு சுவரைக் கட்டுவதற்கு நிதி வசதி இல்லை எனவும் எனவே உடனடியாக ஒரு வலுவான பாதுகாப்பு பக்கவாட்டு சுவரைக் கட்டித்தருமாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குச் செல்லும் படிகளின் ஒரு பகுதியும், பக்கவாட்டுச் சுவரின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















