• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கெஹெல்பத்தர பத்மே மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பேலியகொடையில் மீட்பு

இலங்கை

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்த தீவிர  விசாரணைகளுக்கு அமைய குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்  T-56 ரக 4 மெகசின்களும், மைக்ரோ பிஸ்டலையும் பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி உள்ளிட்ட பல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையில்   நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட  பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரினால்  விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply