கிளாமர் உடையில் ரசிகர்களை கவர்ந்த பாலிவுட் நடிகை ஆலியா பட்
சினிமா
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். கடந்த 2012ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை துவங்கி, இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பின்பும் தனது மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து ரசிகர்களின் மனம் கவரும் கதாபாத்திரங்களில் நடித்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆலியா பட். அந்த வகையில் ஃபேஷன் வீக் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஆலியா, அதற்காக அணிந்திருந்த கிளாமர் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
























