• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாமரை கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பங்கீ ஜம்பிங்

இலங்கை

இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கீ ஜம்பிங்கை (bungee jump) அறிமுகப்படுத்தவுள்ளது.

கட்டமைப்பு பொறியாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தற்போது திட்டமிடல் மற்றும் பொறியியல் கட்டத்தில் உள்ளது.

தாமரை கோபுர மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் கூறுகையில்,

இந்த முயற்சி சுற்றுலாவை மேம்படுத்துவதையும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான தெற்காசியாவின் முதன்மையான இடமாக கோபுரத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இந்த திட்டம் வணிக ரீதியானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், தாமரை கோபுரம் உலகின் மிக உயரமான பஞ்சி ஜம்பிங் வசதியாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply