திஸ்ஸ குட்டியாராச்சிக்கு SLPP கடுமையான எச்சரிக்கை
பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
SLPP இன் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் திஸ்ஸ குட்டியாராச்சியின் அண்மைய அறிக்கைகள் தொடர்பாக இந்த எச்சரிக்கையை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
SLPP இன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும்போது இலங்கையின் “அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதியாக” திஸ்ஸ குட்டியாராச்சி பணியாற்றுவார் என்று கூறியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
ஆதரவாளர்களிடம் உரையாற்றிய திஸ்ஸ குட்டியாராச்சி, ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகத் தன்னைக் கருதுவதாகவும், 2029 இல் ஜனாதிபதி பதவியை வெல்வதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு ஏற்கனவே ஒரு அரசியல் அலை உருவாகி வருவதாகவும் கூறியிருந்தார்.






















