• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாழ வழிதேடி விமான சக்கரத்தில் ஒளிந்து வந்த ஆப்கான் இளைஞன்

ஆப்ஹான் இளைஞன் தன் எதிர்காலத்திற்காக, விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணித்து இந்தியா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம்வயது இளைஞன், ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தின் சக்கரத்தில் பதுங்கி வந்துள்ளான்.

டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒரு இளைஞன் இருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டனர்.

உடனடியாக அவனை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இளைஞன் ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு உயிரை பணயம் வைத்து பயணம் செய்ததாக தெரிவித்துள்ளான்.

இச்சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பின்னர் , இளைஞனின் நிலைமையைப் புரிந்துகொண்டு, டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் உதவியுடன், அதே நாளில் விமானம் மூலம் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டான்
 

Leave a Reply