• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போதைப்பொருள் லொறி உரிமையாளரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

இலங்கை

தங்காலை, சீனிமோதர பகுதியில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்ட LP 3307 என்ற பதிவு எண்ணைக் கொண்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு கல்கிஸ்ஸை நீதிவான் பசன் அமரசேன கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் இரத்மலானை, ஸ்ரீ தர்மராம வீதி என்ற முகவரியைச் சேர்ந்தவர் ஆவார்.

தங்காலை, சீனிமோதர கிழக்கு, கொட்டம்பகஹவதுகொட, எண் 43 என்ற முகவரியைக் கொண்ட வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டிற்கு அருகில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த லொறி நேற்று (22) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, 11 கிராம் 140 மில்லிகிராம் ஹெராயினுடன் லொறியின் உரிமையாளரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்து கல்கிஸை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இன்று (23), சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 

Leave a Reply