கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்து லொறியுடன் மோதி விபத்து
இலங்கை
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறி, பிரதான வீதியின் ஓரமாக உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்துவதற்காக முற்பட்ட வேளை பின்னால் வந்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டினை இழந்து லொறியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தின் போது முச்சக்கரவண்டி மற்றும், அதி சொகுசு பேரூந்தின் முன் பகுதி பாரிய சேதத்துக்குள்ளானதுடன் லொறியின் பின் பகுதியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படாத நிலையில் பேரூந்தின் சாரதி நடத்துனர், மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





















