அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆகஸ்டில் கடும் சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8% குறைந்தது. ஜூலை மாதம் 6% குறைந்தது
இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 15% குறைந்துள்ளது.
இதனால், அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.























