இந்தியாவிலுள்ள மலையக தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இ.தொ.கா.அவதானம்
இலங்கை
இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் நேற்று இச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட குழுவினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற மலையக தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.























