கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்
இலங்கை
காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.
இதனிடையே, 'டாணாக்காரன்' பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்கிறார். இது கார்த்தியின் 29-வது படமாகும். இப்படத்திற்கு 'மார்ஷல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். படத்தின் வில்லனாக நடிகர் ஆதி பினிஷெட்டி நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்றது அது முடிவடைந்த நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.























