முத்து நகர் மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் – மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது
இலங்கை
காணி உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் முன்பாக, முத்து நகர் மக்கள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமது நிலங்களை சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சத்தியாக்கிரக போராட்டம் கடந்த 17ஆம் தகிதி ஆரம்பிக்கப்பட்டது.
குறிப்பாக, அபிவிருத்தி என்ற பெயரில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் நோக்கில் பொதுமக்களின் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் சார்பாக சில பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அதில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தனர்.






















