• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19)  தனது 86 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த  இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார்.

இவர்  2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என அரசியல் வட்டாரங்கள் அவரை நினைவுகூர்கின்றன.

இந்நிலையில் அவரது மறைவு மட்டக்களப்பு மாவட்ட மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply