இஷான் கட்டர், ஜான்வி கபூர் நடித்த ஹோம்பவுண்ட் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை
சினிமா
ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை குழு 2026 ஆஸ்காரின் சிறந்த சர்வதேச படம் விருதுக்கு ஹோம்பவுண்ட் (Homebound) படத்தை பரிந்துரை செய்துள்ளது.
இது தொட்பாக கொல்கத்தாவில், தேர்வுக்குழு கமிட்டி என். சந்திரா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-
பல்வேறு மொழிகளின் 24 படங்கள், பரிந்துரைக்கு பரிசீலிக்கப்பட்டன. இது மிகவும் கடினமான தேர்வு. இந்த படங்கள் மக்களின் வாழ்க்கையை தொட்டவை. நாங்கள் தேர்வாளர்கள் கிடையாது. பயிற்சியாளர்கள். முத்திரை பதிக்கும் வீரர்கள் நாங்கள் தேடுகிறோம்.
இவ்வாறு என். சந்திரா தெரிவித்தார்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என 12 பேர் கொண்ட குழு ஹோம்பவுண்ட் படத்தை துர்வு செய்துள்ளது.
இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாதிரத்தில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.
வட இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பால்ய நண்பர்கள், காவல்துறை அதிகாரிகளாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அந்த வேலை தங்களுக்கு ஒருபோதும் கிடைக்காத மரியாதையைக் கொண்டு வரும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் இலக்கை நெருங்கும்போது, அழுத்தமும் போராட்டங்களும் அவர்களின் நட்பில் சிக்கல்களை உருவாக்குகின்றன. இதுதான் படத்தின் கதைக்களம் ஆகும்.






















