• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருந்து, மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தித் துறையில் புதிய சட்டம் கொடுவரப்படலாம்

இலங்கை

மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தித் துறையில் தேவையேற்பட்டால், புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தித் துறை தொடர்பான வரவு செலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தித் துறை முழு ஆதரவையும் வழங்கும் என்று இக் கலந்துரையாடலில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது அந்த அனைத்து முன்மொழிவுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
 

Leave a Reply