• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவை

இலங்கை

ஊழியர்களின் தீர்க்கப்டாத ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவை செயற்றிடம் வாரம் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் உழியர்களுக்கு கீழ்க்காணும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களிலும் விசேட நடாடும் சேவை வாரம் செப்டெம்பர் 22 தொடக்கம் செப்டெம்பர் 26 வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் தகவலின்படி இதன்போது;

உறுப்பினர்களின் ஊழியர் சேமலாப நிதி உறுப்புரிமைக் கணக்கிகளின் தரவுகள், நிலுவைகளைப் பரிசீலிக்கலாம்.

தவறான உறுப்பினர் கணக்கின் தரவுகள், தேசிய அடையாள அட்டையில் உள்ளபடியாக சரி செய்து கொள்ளலாம்.

உறுப்பினர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்.

தொழில்சட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக ஊழியர்கள் தேசிய அடையாள அட்டை, பி பத்திரம் (பதிவு செய்யப்பட்டிருப்பின்), தொழில் தருநரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட கடிதம் (திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டியிருப்பின்) உள்ளிட்ட ஆவணங்களுடன் அண்மையில் தொழில் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply