மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
இலங்கை
சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 ஆம் திகதி முதல் மின்சார தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையின் மற்றொரு கட்டமாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (17) ஆரம்பமானது.
அதன்படி, இன்று (18) இரண்டாவது நாளாகவும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.























