கோவையில் உள்ள மாலில் நாளை இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீடு விழா
சினிமா
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இன்று காலை படத்தின் என் பாட்டன் சாமி பாடல் வெளியானது.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள Prozone Mall-ல் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.























