• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

இலங்கை

கடவத்தை மற்றும் மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை இன்று (17) மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டின் மத்திய காலப்பகுதியில் இப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இப்பணிகளுக்காக அரசாங்கம் 8.6 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

கடவத்தை இடை மாறும் வழிகள் மற்றும் கடவத்தையிலிருந்து தொடங்கும் அதிவேக நெடுஞ்சாலையின் முதல் 500 மீற்றர் கட்டுமான பணிகளுக்காகவே, இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து பெறப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுடன் இந்த திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

கடவத்தை முதல் மீரிகம வரையிலான 37 கிலோமீற்றர் நீள கட்டுமானப் பணிகள் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply