• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெடுந்தீவில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு

இலங்கை

நெடுந்தீவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர்கள் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.

நேற்று (16) இரவு 7.00 மணியளவில் தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு மதுபானசாலையில் நேற்று இரவு திடீரென புகுந்த இளைஞர் குழு, மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

குறித்த தாக்குதலில் தில் இரண்டு பேர் தலையிலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீதும் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது, ஒருவர் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்றவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply