புஷ்கர்- காயத்ரியின் அடுத்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு நிறைவு..
சினிமா
சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் நடிக்கும் வெப்சீரிஸின் படப்படிப்பு நிறைவடைந்துள்ளது. கிரியேட்டிவ் புரொடியூசர்களான புஷ்கர்- காயத்ரியின் அடுத்த படைப்பு இதுவாகும்.
துஷாரா விஜயன் முன்னணி ரோலில் நடிக்க, அப்பாஸ் நீண்ட காலத்திற்குப் பிறகு வெப்சீரிஸ் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதற்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வரும் அமேசான் பிரைமில் இத்தொடர் ரிலீஸ் ஆக உள்ளது.






















