உலக வங்கி குழும பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு
இலங்கை
உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிகளை சந்தித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டத்திற்கு உலக வங்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக்கூடிய துறைகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது குறித்தும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணி, பொருளாதார வளர்ச்சியை அடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கேட்டு கொண்டுள்ளார்.























