• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுனில் வட்டகல முறைப்பாடு

இலங்கை

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார்.

பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கொழும்பு பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை வாங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதனால் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, தன்னை பற்றி சமூக ஊடகங்களில் பரவும் போலியான பதிவுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

தன்னை பற்றி சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் போலியானது என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது முகநூல் பக்கத்திலும்  பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply