• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருகோணமலை சிவன் கோவிலில் இருந்து ஆரம்பமான தியாகி திலீபனின் நினைவு ஊர்தி

இலங்கை

தியாகி திலீபனின் 38வது நினைவு தினத்தின் நினைவு ஊர்தி, இன்று திருகோணமலை சிவன் கோவிலில் இருந்து ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளது.

திருகோணமலை சிவன் கோவிலடியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் திருகோணமலை வாழ் மக்கள் ஒன்றிணைந்து சுடர் ஏற்றி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

குறித்த ஊர்தியானது திருகோணமலை நகரை வலம் வந்ததுடன் பொதுமக்கள் தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply