• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோனை பறக்கவிட்ட சீனப் பிரஜை கைது

இலங்கை

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான சீன நாட்டவர் நேற்று (15) இரவு 7:00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணைக்காக, சீன நாட்டவரும் ட்ரோனும் ஸ்ரீ தலதா மாளிகை பொலிஸாரால் கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply