• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போராட்டக்காரர்கள் பசியாற உதவிய இந்தியர்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புலம்பெயர்ந்தோர், அகதிகள், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. லட்சக்கணக்காணவர்கள் பங்கேற்றனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களான இந்தியர்கள், இந்திய வம்சாவளியினருக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இதேவேளையில் லண்டன் நகரங்களில் இருந்த இந்திய உணவகங்களில் வியாபாரம் களைகட்டியது. சில பேராட்டக்காரர்கள் லண்டன் நகரில் உள்ள இந்தியர்கள் நிர்வகித்து வரும் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் குவிந்து உணவு சாப்பிட்டனர். பலர் இந்திய கடைகளில் விற்கப்பட்ட வெங்காய பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை வாங்கி ருசித்தபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியர்களுக்கு எதிரான போராட்டத்தில் சுடச்சுட பஜ்ஜி விற்பனை அமோகமாக நடந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் இங்கிலாந்தின் தேசியக்கொடியை உடலில் போர்த்திய வாலிபர்கள், இளம்பெண்கள் பஜ்ஜி வாங்கி செல்லும் காட்சிகள் இடம்பெற்றன. "இந்திய தயவு இல்லாமல் அன்றும் இல்லை... இன்றும் இல்லை... என்றும் இல்லை" என கருத்து பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
 

Leave a Reply