• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வீட்டு விற்பனையில் ஏற்பட்ட அதிகரிப்பு

கனடா

கனடாவில் வீட்டு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2025 ஆகஸ்ட் மாதத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கனடிய வீட்டு மனை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நாடு முழுவதும் 40,257 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது 2024 ஆகஸ்ட் மாத விற்பனையான 39,522 வீடுகளை விட 1.9% அதிகமாகும்.

மேலும், மாதந்தோறும் விற்பனை 1.1% அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்து மொத்தமாக 12.5% உயர்வை கண்டுள்ளது. இது தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீட்டு விற்பனை அதிகரிப்பை பதிவு செய்கிறது.

சாதாரணமாக ஒக்டோபர் காலத்தில் புதிய வீடுகள் சந்தைக்கு வரும். அதோடு, இந்த வாரம் கனடா வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், வாங்குபவர்களின் ஆர்வம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது,” என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வீட்டு பட்டியல்கள் மாதந்தோறும் 2.6% உயர்ந்துள்ளன. ஆகஸ்ட் இறுதியில் நாடு முழுவதும் விற்பனைக்கு இருந்த வீடுகள் 1,95,453 என பதிவாகியுள்ளன.

இது கடந்த ஆண்டை விட 8.8% அதிகம். 2025 ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட வீடுகளின் சராசரி விலை 664,078 டொலர்களாக காணப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 1.8% அதிகமாகும். 
 

Leave a Reply