ஐரோப்பிய யூனியனுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
இலங்கை
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அதற்கு பதிலாக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஐரோப்பா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது. அவர்கள் வாங்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அவர்கள் விதிக்கும் தடைகள் போதவில்லை.
நான் தடைகளை விதிக்க தயாராக இருக்கிறேன், ஆனால் அவர்கள் நான் செய்வது போல் கடுமையாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் “நேட்டோவுடன் இணைந்து சீனாவுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்பட்டால், ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத் தகவலின்படி, ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் நேட்டோ உறுப்பினரான துருக்கி முதலிடங்களில் உள்ளன எனவும், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளும் ரஷ்ய எண்ணெயயை இறக்குமதி செய்து வருகின்றன எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.






















