• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

இலங்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் இன்று (15) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர் முழுமையான நவீனமயமாக்கலுக்கு உட்பட உள்ளது.

இந்த திட்டத்திற்கு ரூ. 424 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் மற்றும் தொடர்பு மையங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பல நவீன வசதிகள் நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

இந்தப் பணிகளை இலங்கை விமானப்படை (SLAF) மேற்கொள்ளும்.

இதற்கிடையில், அரசாங்கத்தின் “கனவு இலக்கு” திட்டத்தின் (Dream Destination Project) கீழ், வரலாற்று சிறப்புமிக்க மருதானை ரயில் நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகளும் இன்று ஆரம்பமாகவுள்ளது.

​​ரயில் பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நிலையத்தின் வரலாற்று பாரம்பரியத்தை சேதப்படுத்தாமல், மருதானை ரயில் நிலையத்தின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும், “கனவு இலக்கு” திட்டத்தின் கீழ், தனியார் பங்களிப்புடன், நவீனமயப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply